இந்தியாவில் 2011 - 2019 காலக்கட்டத்தில் வறுமையின் அளவு 12.3 விழுக்காடு குறைந்துள்ளது - உலக வங்கி
இந்தியாவில் 2011 - 2019 காலக்கட்டத்தில் வறுமையின் அளவு 12 புள்ளி 3 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி எனப்படும் உலக வங்கி வெளியிட்டுள்ள கொள்கை விளக்க அறிக்கையில் இந்தியாவில் 2011ஆம் ஆண்டு வறுமையின் அளவு 22 புள்ளி 5 விழுக்காடாக இருந்ததாகவும், அது 2019ஆம் ஆண்டில் 10 புள்ளி 2 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறத்தைவிட ஊர்ப்புறத்தில் வறுமை அளவு அதிகம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிறுகுறு விவசாயிகளின் வருமானம் 10 விழுக்காடு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் பன்னாட்டுப் பணநிதியம் வெளியிட்ட அறிக்கையிலும் இந்தியாவில் கிட்டத்தட்ட வறுமை ஒழிக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.
Comments