டெல்லியில் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது ராணுவ கமாண்டர்கள் மாநாடு
இந்த ஆண்டின் முதல் ராணுவ கமாண்டர்கள் மாநாடு நாளைய தினம் டெல்லியில் துவங்குகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் இந்த ராணுவ கமாண்டர்கள் மாநாடு, நாளை தொடங்கி, 22-ந் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது.
ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், எல்லையில் நிலவும் நிலைமை, அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து கமாண்டர்களிடம் ஆலோசனை நடத்தி கேட்டறிவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், எல்லை பிரச்சனைகளில் மேலும் கவனம் செலுத்தி, ராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனையும் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் எல்லையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, அண்டை நாடுகள் உடனான எல்லை பிரச்சனை, உள்நாட்டு ராணுவ உற்பத்தி தளவாளடங்களை நவீனபடுத்துதல், ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரின் தாக்கம் குறித்தும் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments