நிலம் கையகப்படுத்தப்படுவதை கண்டித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.!
தருமபுரியில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க தனது நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு, இருண்டூர் அருகே பாலவாடி, கரியப்பன அள்ளி பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளுக்காக நிலத்தை அளக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனை எதிர்த்து பாலவாடி சந்திப்பு சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட கரியப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் பின்னர் தனது வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விவசாயியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Comments