ஆப்கனில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு.!
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தலிபான்கள் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு நாடுகளும் சுமார் 2,700 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிரும் நிலையில், தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து எல்லை பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானிய பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், சனிக்கிழமை குனார் மாகாணத்தின் ஹெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தின.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தலிபான்கள் அரசு, மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது.
இது போன்ற தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையே பகைமையை உருவாக்கும் எனவும் போர் தொடங்கினால் அது எந்த தரப்புக்கும் சாதகமாக இருக்காது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments