ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா.. 2 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்ததாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவின் ஹேம்ஹங் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இரு ஏவுகணைகளும் சுமார் 25 கிலோ மீட்டர் உயர்த்தில் பறந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏவப்பட்ட இந்த தந்திரோபாய ஏவுகணை சோதனைகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நேரில் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய நிறுவனர் கிம் இல் சுங்கின் 110வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Comments