கொரட்டூரில் பால் வண்டியை வழிமறித்து அமைச்சர் நாசர் அதிகாலையில் தீடீர் ஆய்வு.!
சென்னை கொரட்டூரில், அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து விநியோகஸ்தர்கள் மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் எடுத்துச்செல்லப்படும் வண்டியை நிறுத்தி அதிகாலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காவல்துறையினர் மற்றும் ஆவின் அதிகாரிகள் உதவியுடன் அவர் ஆய்வு மேற்கொண்டதில் டப்புகளில் வழக்கமான எண்ணிக்கைக்கும் மேல் கூடுதலாக இருந்த 107 பால் பாக்கெட்டுகள் சிக்கின.
அவற்றை பறிமுதல் செய்த பின்னர் பேசிய அமைச்சர், முறையாக கண்காணிக்காமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவே ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த பிரச்சனை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் கூறினார்.
Comments