திருவண்ணாமலையில் 5 மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள்.. சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் கிரி வலம் வந்த பக்தர்கள் சிரமம்
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கிரிவலம் வந்த பகதர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏற்கனவே அறிவித்தபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் பயணிகள் காத்துக்கிடந்தனர்.
சொந்த ஊர் திரும்பும் பக்தர்களுக்காக திருவண்ணாமலை நகருக்கு வரும் ஒன்பது சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவை நீண்ட தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாலும் , மழை பெய்த காரணத்தாலும் அங்கு நடந்து செல்ல முடியாத பக்தர்கள் ரயில் நிலையத்திற்கு சென்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் 5 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து ரயிலில் கூட்ட நெரிசலில் பயணம் செய்தனர்.
Comments