இமாச்சல பிரதேசம் - லடாக் இடையிலான உலகின் உயரமான சுரங்க வழிப்பாதை.. 2025ஆம் ஆண்டிற்குள் கட்டுமான பணிகளை முடித்து திறக்க முடிவு

0 3286
இமாச்சல பிரதேசம் - லடாக் இடையிலான உலகின் உயரமான சுரங்க வழிப்பாதை.. 2025ஆம் ஆண்டிற்குள் கட்டுமான பணிகளை முடித்து திறக்க முடிவு

இமாச்சல பிரதேசம் - லடாக்கை இணைக்கும் உலகின் உயரமான சுரங்க வழிப்பாதையை அமைக்கும் பணியில் BRO எனப்படும் எல்லைச் சாலைகள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

ஷிங்கு லா மலைப் பாதை வழியாக 16ஆயிரத்து 580 அடி உயரத்தில் இமாச்சலம் மற்றும் லடாக்கை இணைக்கும் சுரங்க வழிப்பாதையை அமைக்கும் பிராஜக்ட் யோஜக் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வரும் ஜூலை மாதம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2025ஆம் ஆண்டு சுரங்க வழிப்பாதை முழுமை பெறும் என எல்லைச் சாலைகள் அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுரங்கப் பாதையின் மூலம் கார்கில் பகுதியை ஒட்டியுள்ள சான்ஸ்கரின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments