இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்.. ஒன்பதாவது நாளாக அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் திரண்டனர்

0 2981
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்.. ஒன்பதாவது நாளாக அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் திரண்டனர்

பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பமே காரணம் என குற்றம் சாட்டும் பொதுமக்கள் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் மாளிகை எதிரே 9 வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி இரவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இலங்கை அரசிடம் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடுகிறது. 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments