ஆட்சி மாற்றத்துக்குப் பின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு நிலை என்ன? பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார் இம்ரான் கான்
இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
சபாநாயகராக நேற்று ராஜா பர்வேஸ் அஷரப் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெஷாவர் நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றனவா என்று கேள்வி எழுப்பினார்.
அணு ஆயுதங்களை அவர்களால் பாதுகாக்க முடியுமா என்று தமது மனதுக்குள் கேள்வி எழுவதாகவும் இம்ரான் கான் கூறினார். இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதங்களுக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
Comments