3,215 மின் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக ஒக்கினாவா அறிவிப்பு
பேட்டரி தொடர்பான சிக்கல்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் 3 ஆயிரத்து 215 மின் ஸ்கூட்டர்களை திரும்பப் பெற உள்ளதாக ஒக்கினாவா ஆட்டோ டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மை காலமாக, ஒக்கினாவோ உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது தீப்பற்றி எரியும் சம்பவங்கள் நாட்டில் பல பகுதிகளில் நடந்த நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் பிரைஸ் ப்ரோ ரக வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதில் பேட்டரி தொடர்பான சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சரி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒகினாவா டீலர்ஷிப்களில் இலவசமாக சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments