போக்குவரத்து விதிகளை மீறும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள்.. 365 வழக்குகள் பதிவு, ரூ.48,300 அபராதம் விதிப்பு

0 3118
போக்குவரத்து விதிகளை மீறும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள்.. 365 வழக்குகள் பதிவு, ரூ.48,300 அபராதம் விதிப்பு

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் ஸ்விக்கி, சொமேட்டோ, டன்சோ ஆகிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களின் ஊழியர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

 பெரும்பாலான உணவு விநியோக வாகன ஓட்டிகள் சிக்னல் மீறல், அதிவேகத்தில் செல்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விரைவாக விநியோகம் செய்வதன் மூலம், அவர்களின் உயிரையும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிரையும் ஆபத்திற்கு உள்ளாக்குவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை குறைக்கும் வகையில், விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments