அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் குழந்தைகளை பாதிக்கும் கல்லீரல் நோய்.. நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளில் குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்மநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒன்று முதல் ஆறு வயதுடைய குழந்தைகளை தாக்கும் அந்நோய், இங்கிலாந்தில் 74 பேருக்கும், அமெரிக்காவில் 9 பேருக்கும் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, கல்லீரல் பாதிப்பு நோயால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், 6 பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக குறிப்பிட்டது.
கல்லீரல் வீக்கம் உள்ளிட்டவை இந்த நோய்க்கான அறிகுறியாக கருதப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்டவை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments