புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிலுவைப்பாதை நிகழ்ச்சி.. கொரானா தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பின் பொதுமக்களுக்கு அனுமதி
இயேசுவின் இறுதி நாளை சித்தரிக்கும் சிலுவைப் பாதை ஊர்வலம், மெக்சிகோவில் நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் இறுதி நாளன்று அவரை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதை, வீதி நாடகமாக நடித்துக் காட்டும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, மெக்சிகோவின் இஸ்தபலபா நகரில், ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், இந்த ஆண்டு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Comments