இயக்குநர் வெற்றிமாறனின் அறக்கட்டளைக்குத் தயாரிப்பாளர் தாணு ரூ. 1 கோடி நன்கொடை
திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கிய அறக்கட்டளைக்குத் தயாரிப்பாளர் தாணு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் நாம் அறக்கட்டளை மூலம் திரை - பண்பாடு ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் திரைத்துறைக்கு வர விரும்பும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளைக் கட்டணமில்லாமல் செய்து கொடுத்துப் பயிற்சியளித்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.
இதன் தொடக்க விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கிய தயாரிப்பாளர் தாணு, திரை - பண்பாடு ஆய்வகத்தில் படிப்போரில் வெற்றிமாறன் கைகாட்டும் ஆளுக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்புத் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.
Comments