வட கொரியாவில் கிம் இல் சுங் 110வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாட்டம்

0 3112
வட கொரியாவில் கிம் இல் சுங் 110வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாட்டம்

வட கொரிய நிறுவனர் கிம் இல் சுங்கின் 110ஆவது பிறந்த தினம் பியாங்யாங் நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வட கொரியாவின் தற்போதைய ஆட்சி முறைக்கு வழி வகுத்த கிம் இல் சுங்கின் பிறந்த தினத்தை, ஆண்டுதோறும் தேசிய விடுமுறையாக அறிவித்து, ‘சூரியனின் தினம்‘ என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

அவரது 110வது பிறந்த தினத்தையொட்டி தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் நேற்று மாலை பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதில் இடம் பெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை, கிம் இல் சுங்கின் பேரனும் தற்போதைய அதிபருமான கிம் ஜோங் உன், அவரது சகோதரி கிம் யோ ஜோங் பார்த்து ரசித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments