ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு சேதம்.. கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு..

0 3060
உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய படைகள் வீசிய குண்டு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாய்ந்ததில் அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கார்க்கிவ் நகரம் போர் தொடங்கிய நாள் முதலே ரஷ்ய படைகளின் முக்கிய குறியாக இருந்து வருகிறது. இந்த வாரத்தில் ஒரே இரவில் அங்கு சுமார் 60 பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் குடியிருப்புப்பகுதிகள் மற்றும் கட்டிடங்களை தாக்கியதில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments