இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணை உதிரி பாகங்களை இரண்டாம் தவணையாக அனுப்பிய ரஷ்யா..

0 7398
உக்ரைனுடன் போர் தீவிரம் அடைந்துள்ள சூழலில் இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைகளின் எஞ்சின்கள் மற்றும் உதிரிபாகங்களை இரண்டாம் தவணை டெலிவரியை வழங்கியது ரஷ்யா.

உக்ரைனுடன் போர் தீவிரம் அடைந்துள்ள சூழலில் இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைகளின் எஞ்சின்கள் மற்றும் உதிரிபாகங்களை இரண்டாம் தவணை டெலிவரியை வழங்கியது ரஷ்யா.

எஸ் 400 ஏவுகணைகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கான சிமிலேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் மாஸ்கோவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பயிற்சிக்கான உதிரி பாகங்கள் மட்டும் இருக்கின்றன, ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்கள் போன்றவை இல்லை என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான விலையை இந்தியா எந்த வகையில் செலுத்தும் என்பது தெளிவாகவில்லை.

இந்தியா ரஷ்யா இடையே பணப்பரிவர்த்தனைகளை ரூபாய் மற்றும் ரூபிள் முறையில் மேற்கொள்ள ரஷ்யா கோரியபோதும், அத்தகைய திட்டம் ஏதுமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments