இலங்கை, பாக். திவாலாவதைத் தடுக்க சீனா நிதியுதவி..
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசுகள் திவாலாவதைத் தடுக்க சீனா நிதியுதவி வழங்கி வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் அரசுகளுக்கு சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியை விட கூடுதலாக நிதியுதவி அளிக்கும் நாடாக சீனா வளர்ந்துள்ளது. நட்பு நாடுகளான பாகிஸ்தானும் இலங்கையும் திவால் ஆவதை சீனா விரும்பவில்லை.
இந்த இரு நாடுகளிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஏற்கனவே சீனா பெரும் நிதியை அளித்துள்ளதால் இந்த நாடுகள் பெரும் கடன்சுமைக்குத் தள்ளப்பட்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
கடன் திரும்பி வரும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நிலையில் சீன வங்கிகள் அதிக நிதிச்சுமையை தாங்கக்கூடிய நிலையில் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சீனா தொடர்ந்து இலங்கை பாகிஸ்தான் அரசுகளுக்கு நிதியுதவி அளித்து உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments