உணவுதானியங்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்... பிரதமர் மோடியின் அழைப்பையடுத்து ஐ.நா.சபை பரிந்துரை
உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், உலகிற்கே இந்தியா உணவு தானியங்களை அளிக்க தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடியின் அழைப்பை அடுத்து, உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தும்படி ஐநா.சபையும் பரிந்துரை செய்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு உதவ, உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐநா.சபை வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
Comments