சன்னிலியோனா? 10 சதவீத தள்ளுபடியா ? தள்ளி வச்சிருவாங்க..! கோழிக்கறி மட்டும் போதும்பா..!

0 4686
கோழி இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், சன்னிலியோனை பாராட்டி கருத்து கூறவைத்து 10 சதவீத தள்ளுபடி அளித்து வருகின்றார்.

கோழி இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், சன்னிலியோனை பாராட்டி கருத்து கூறவைத்து 10 சதவீத தள்ளுபடி அளித்து வருகின்றார்.

கர்நாடக மாநிலம், மண்டியாவில் சிக்கன் கடை நடத்திவரும் பிரசாத் என்ற இளைஞர், நடிகை சன்னி லியோனின் தீவிர ரசிகர். இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் சன்னிலியோன் ரசிகர்களுக்கு மட்டும் 10 சதவீத தள்ளுபடி வழங்கி வருகின்றார்.

வாடிக்கையாளர்கள் சன்னிலியோன் ரசிகர்தானா என்பதை கண்டறிய சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதன்படி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சன்னி லியோனை பின் தொடர வேண்டும்.

அவர்களது மொபைலில் குறைந்தது சன்னிலியோனின் 10 புகைப்படங்களாவது வைத்திருக்க வேண்டும். சன்னிலியோன் நடித்த எல்லாப் படங்களும் பாராட்டப்பட வேண்டியவை என்று கருத்து தெரிவிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் பூர்த்தியானால் அந்த வாடிக்கையாளருக்கு 10% தள்ளுபடியில் சிக்கன் கிடைக்கும் என்று பிரசாத் தெரிவித்துள்ளார். 10 சதவீத தள்ளுபடிக்கு ஆசைப்பட்டு , பிரசாத் சொன்ன நிபந்தனைகளை ஏற்றால், மனைவி தன்னை வீட்டை விட்டு தள்ளிவைத்து விடுவார் என்று தலையில் அடித்துக் கொண்டே தள்ளுபடி இல்லாமல் சிலர் சிக்கன் வாங்கிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments