நூறாண்டுகளைக் கடந்த மரங்களை அகற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.. அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்து மனு அளித்த மக்கள்..

0 2451
சேலம் அருகே நூறாண்டுகளைக் கடந்த பழமையான மரங்களை வேரோடு அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, அமைச்சர் கே.என்.நேருவின் காரை நடு வழியில் மறித்து பொதுமக்கள் புகாரளித்தனர்.

சேலம் அருகே நூறாண்டுகளைக் கடந்த பழமையான மரங்களை வேரோடு அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, அமைச்சர் கே.என்.நேருவின் காரை நடு வழியில் மறித்து பொதுமக்கள் புகாரளித்தனர்.

கெஜல்நாயக்கன்பட்டி கருப்பண்ணசாமி கோவில் அருகே ஓடைப் புறம்போக்கு நிலத்தில் இந்த பழமை வாய்ந்த மரங்கள் இருந்துள்ளன. அந்தப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் மதன்லால் என்பவர் வாங்கி அதனை வீட்டுமனைகளாகப் பிரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தனது நிலத்துக்குச் செல்லும் வழியில் மரங்கள் இடையூறு செய்வதாகக் கூறி, அவற்றை வெட்ட முயன்றபோது, வருவாய்த்துறையினர் தடுத்து எச்சரித்துச் சென்றுள்ளனர். அந்த எச்சரிக்கையையும் மீறி ஜேசிபி இயந்திரம் கொண்டு மரங்களை மதன்லால் அகற்றினார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவ்வழியாகச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்து அவரிடம் மனுவினை அளிக்க முடிவு செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றபோது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசாரின் தடுப்பையும் மீறி அமைச்சரின் காரை வழிமறித்து பொதுமக்கள் மனுவினை அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments