பரிசுப் பொருட்களை ரூ.14 கோடிக்கு விற்றதாக இம்ரான்கான் மீது புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு..
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை முறைகேடாக 14 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றம்சாட்டியிருக்கிறார்.
வெளிநாடுகளில் வழங்கப்பட்ட வைர நகைகள், கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை இம்ரான்கான் துபாயில் விற்பனை செய்திருப்பதாக அவர் புகார் தெரிவித்தார்.
ஆனால், இம்ரான்கான் மீது புதிய பிரதமர் வீண்பழி சுமத்துவதாக முன்னாள் அமைச்சர் பவத் சவுத்திரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சட்டப்படி பிரதமருக்கு பரிசாக கிடைக்கும் பொருட்களை அரசின் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். அந்த பரிசுப் பொருட்களை சொந்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால் அதனை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையை கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments