டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க முன்வந்ததை நிராகரிக்கிறேன் - சவுதி இளவரசர்
டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4300 கோடி டாலர் கொடுத்து வாங்க, டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க் முன்வந்திருப்பதை நிராகரிப்பதாக, டிவிட்டர் நிறுவனத்தின் நீண்டகால முதலீட்டாளர்களில் ஒருவரும், சவுதி இளவரசருமான அல்வாலீத் பின் தலால் தெரிவித்துள்ளார்.
ஒரு பங்கை 54 டாலர் என்ற விலையில் வாங்க தயார் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டிருக்கும் தொகை, டிவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒப்பிடும் போது பங்கின் உள்ளார்ந்த மதிப்புக்கு அருகில் வரும் என்று தான் நம்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தின் 5.2 சதவீத பங்குகள் சவுதி அரசு நிறுவனம் மற்றும் தன்னிடம் இருப்பதாகவும், அதன் மதிப்பு மட்டும் 375 கோடி ரியால் என்று அல்வாலீத் பின் தலால் தெரிவித்துள்ளார்.
அவருக்கு இரு கேள்விகளை எழுப்பி இருக்கும் எலான் மஸ்க், சவுதி அரசிடம் மொத்தம் எவ்வளவு டிவிட்டர் பங்குகள் உள்ளன, பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக சவுதி அரசின் நிலைப்பாடு என்ன என்று வினவி இருக்கிறார்.
Comments