அமெரிக்க எல்லை அருகே, உக்ரைனிய பெண்மணியை திருமணம் செய்த ரஷ்யர்
அமெரிக்காவில் அடைக்கலம் புகுவதற்காக ரஷ்யர் ஒருவர் தன் உக்ரைன் நாட்டு காதலியை அமெரிக்க எல்லை அருகே உள்ள குடிமக்கள் பதிவு அலுவலகத்தில் வைத்து கரம் பிடித்தார்.
ரஷ்யரான செமன் பிரபவுஸ்கி-யும், உக்ரைன் நாட்டின் டரினா-வும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவெடுத்தனர்.
அதற்காக மெக்சிகோ வந்த அவர்கள் அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைவதற்காக விண்ணப்பித்தனர். உக்ரைனிய பெண்மணியான டரினா-விற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ரஷ்யரான செமன் பிரபவுஸ்கி-யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து புலம்பெயர்ந்தோருக்கான சேவை மைய அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, அவர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி மணம் செய்து கொண்டனர்.
Comments