ஒப்பந்தக்காரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு.. ஈஸ்வரப்பா இன்று மாலை பதவி விலக உள்ளதாக முதலமைச்சர் தகவல்
ஒப்பந்தக்காரர் தற்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று மாலை பதவி விலக உள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் புலனாய்வு அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஆகிக் கருத்துக் கூற வேண்டியதில்லை என்றும், விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்தக்காரர் சந்தோஷ் பாட்டீல், அமைச்சரும் அவர் ஆட்களும் 40 விழுக்காடு கமிஷன் கேட்டதாகவும், தனது சாவுக்கு அமைச்சரே காரணம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்துத் தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீதும், அவர் ஆட்கள் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதனால் அமைச்சர் பதவியில் இருந்து ஈஸ்வரப்பாவை நீக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Comments