ஊர்ப்புறங்களில் கல்வி, மருத்துவத் துறைகளில் போதிய வசதிகள் இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
ஊரகப் பகுதிகளில் போதுமான அளவில் கல்வி, மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சிங்கட்டில் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய அவர், கல்வி, மருத்துவத் துறைகளில் நகர்ப்புறங்களை ஒப்பிடும்போது, ஊரகப் பகுதிகளில் போதுமான வசதிகள் இல்லை எனத் தெரிவித்தார்.
பள்ளிக் கட்டடம் இருந்தால் ஆசிரியர்கள் இல்லாமலும், ஆசிரியர்கள் இருந்தால் கட்டடம் இல்லாமலும் உள்ளதாகத் தெரிவித்தார். ஆசிரியர்களும் வகுப்பறைகளும் இருந்தால் மாணவர்கள் இல்லை என்றும், மூன்றுமிருந்தால் அங்குக் கல்வி இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பழங்குடியினர் பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு கொரோனா சூழலில் அனுப்பிய வென்டிலேட்டர்கள், சுவாசக் கருவிகளைப் பொருத்த அங்கிருந்த மருத்துவர்களுக்குத் தெரியவில்லை என்றும், பின்னர் அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Comments