இந்திய நீதித்துறை அதிக சுமை கொண்டதாக இருக்கிறது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

0 2035
இந்திய நீதித்துறை அதிக சுமை கொண்டதாக இருக்கிறது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இந்திய நீதித்துறை அதிக சுமை கொண்டதாக இருக்கிறது என கருத்து கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றார். உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் தான், அனைத்து குடிமகனுக்கும் நீதி கிடைப்பது சாத்தியமாகும் எனவும் கூறினார்.

மேலும், நீதிமன்றங்களில் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஒரு வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகிறது எனவும் அவர் தனக்கு தானே கேள்வி எழுப்பிக் கொண்டார்.

மேலும், சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்கள் எந்தவித அழுத்தத்திற்கும் உட்படாமல் சுதந்திரமாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments