காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

0 2113
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

சோபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்த, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் நேற்று என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டம் படிகான் பகுதியில் இந்த என்கவுன்டர் நடைபெற்றது. இதையடுத்து, அங்குள்ள சவுகான் ராணுவ முகாமில் இருந்து என்கவுன்டர் நடைபெற்ற இடத்துக்கு சென்ற ராணுவ வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments