விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் - அகில இந்திய ஹஜ் கமிட்டி
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என அகில இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நலிந்த இஸ்லாமியர்களுக்கு ரமலான் பெருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரானா கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தமுறை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
Comments