பஞ்சு இறக்குமதிக்கு செப்டம்பர் 30 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு.!

0 3039

கச்சாப் பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்தது, துணிகள், ஆடைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் என ஆடை ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை உயர்வால் பின்னலாடை, ஆயத்த ஆடைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கத் தொழில்துறையினர் கோரி வந்தனர்.

இதை ஏற்றுக் கச்சாப் பருத்தி இறக்குமதி மீதான 5 விழுக்காடு சுங்கவரி, வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான 5 விழுக்காடு மேல்வரி ஆகியவற்றுக்கு செப்டம்பர் இறுதிவரை விலக்களிப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் பஞ்சு, நூல், துணிகள், ஆயத்த ஆடைகளின் விலை குறையும் என்றும், இது பிற நாடுகளின் போட்டியைச் சமாளித்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்றும் ஏற்றுமதியாளர் கூட்டமைப்புத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments