சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாள் இன்று.. சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3710
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாள் இன்று.. சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னையிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஆர்.ஏ.புரத்திலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, சமத்துவ நாள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

சட்டப்பேரவையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் வி.சி.க. சார்பில் வழங்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மணிமண்டப நிர்வாகத்திடம் அவர் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments