உக்ரைன் மீது ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

0 3090
உக்ரைன் மீது ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் போரில் ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி, மனித நேயத்திற்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டதாக கூறினார்.

ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார். உக்ரைன் போரில் ரஷ்யப் படைகள் அனைத்து வகையான பீரங்கிகள், ஏவுகணைகள், வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும், குறிப்பாக பொது கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யப் படைகள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.

இது முற்றிலும் பொது மக்களுக்கு எதிரான பயங்கரவாதம் என்றார். உக்ரைன் மக்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் உலக நாடுகள் ஈடுபடாமல், தடைகளை அதிகப்படுத்தினாலே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு  ரஷ்யா தானாக வரும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments