உலகமே இந்தியாவின் உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்பார்க்கிறது - பியூஷ் கோயல்

0 3483
உலகமே இந்தியாவின் உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்பார்க்கிறது - பியூஷ் கோயல்

இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை அடுத்து இதனை பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர், உலகளாவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாக கூறினார்.

இந்தியாவில் தானிய உற்பத்தியால் இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்குவதாகக் கூறிய பியூஷ் கோயல், கடந்த சில வாரங்களில் 20 முதல் 30 லட்சம் டன்கள் வரை கோதுமை  ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா பருப்பு வகைகள் இறக்குமதிகளின் மீது வரிகளை குறைத்து அனைத்து வித நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments