இன்று நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம்.. உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை
மீன் பிடித் தடைக்காலம் நாளை முதல் துவங்க உள்ள நிலையில், தடை காலத்தில் வழங்கப்படும் உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் பிடி தடைக் காலம் இன்று நள்ளிரவு தொடங்கி 61 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது. மீனவள பாதுகாப்பு காரணமாக அடுத்த 61 நாட்களுக்கு விசைப் படகுகள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தடைக் காலத்தில் வழங்கப்படும் நிதி உதவியை விரைந்து வழங்குமாறு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments