வரலாற்று சாதனையாக கடந்த நிதி ஆண்டில் இந்தியா ரூ.31.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது - பியூஷ் கோயல்
இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாக கடந்த நிதி ஆண்டில் இந்தியா 31 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாப்ட்வேர் உள்பட 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் மேலும் ஒரு மைல்கல்லை இந்தியா எட்டியிருப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஜவுளி, மருந்து, தோல் பொருட்கள் போன்ற துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தங்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
Comments