ரூ.85.53 கோடியில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் 85 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது 16 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
நாட்டுக் கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டிலுள்ள நாட்டின நாய்களுக்கான இனப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஒரு கோடி ரூபாய் செலவில் தென்காசி மாவட்டத்தில் நிறுவப்படும் என அவர் அறிவித்தார்.
Comments