மது குடித்துவிட்டு நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறு... நண்பர்களில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

0 7595

மதுரையில் மது குடித்துவிட்டு நண்பர்கள் இடையே எற்பட்ட தகராறில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருமங்கலம் அருகே உள்ள சேட்டிலைட் சிட்டி பகுதியில் கடந்த 10-ஆம் தேதி இரவு, அய்யம்பாண்டி, சசி, வசந்த் ஆகிய 3 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து  மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் கோபமடைந்த அய்யம்பாண்டி அங்கிருந்து சென்று கூத்தியார் குண்டு விலக்கு அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்றுக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அங்கு வந்த சசி மற்றும் வசந்த் அய்யம்பாண்டியுடன் கைக்கலப்பில் ஈடுபட்டதாகவும், அப்போது சசி,அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யம்பாண்டியை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் சிகிச்சை பெற்று வந்த அய்யம்பாண்டி உயிரிழந்த நிலையில், தப்பி ஓடிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments