உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தை முட்டுச்சந்தில் போய் நிற்கிறது - அதிபர் புதின்
உக்ரைனுடன் நடத்தி வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் முட்டுச்சந்தில் போய் நிற்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காகவே உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்ததாக அவர் கூறினார். புச்சாவில் அப்பாவிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் உக்ரைன் கூறும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும் புதின் தெரிவித்தார்.
ரஷ்யாவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க மேற்கத்திய நாடுகள் புச்சா தொடர்பான பொய்தகவல்களைப் பரப்பி வருவதாகவும் புதின் கூறியுள்ளார். இதனிடையே மரியாபோல் நகரை ரஷ்யப் படைகள் சூறையாடி விட்டதாகவும் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய ராணுவத்தினர் ஏராளமான பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி வருவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
Comments