ஒரே சமயத்தில் இரு முழுநேர பட்டப்படிப்பை மாணவர்கள் தொடர்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு

0 10241
ஒரே சமயத்தில் இரு முழுநேர பட்டப்படிப்பை மாணவர்கள் தொடர்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு

ஒரே சமயத்தில் இரு முழுநேர பட்டப்படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து தொடருவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, ஒரே நேரத்தில் இரு முழுநேர பட்டப்படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து ஆன்லைன் அல்லது நேரடி வகுப்பு முறையில் படிப்பை தொடரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி பட்டப் படிப்புகளை வெவ்வேறு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை, டிப்ளமோ உள்ளிட்ட பட்டப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்கள் விருப்ப பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments