யூடியூப் வலைதளம் திடீர் முடக்கம் - பயனாளர்கள் கடும் அவதி

0 3534
யூடியூப் வலைதளம் திடீர் முடக்கம் - பயனாளர்கள் கடும் அவதி

உலக அளவில் யூடியூப் வலைதளம் திடீரென முடங்கியதால் அதன் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பயனளார்கள் தங்கள் யூடியூப் கணக்கின் உள் நுழைய முடியாமலும், சுயவிவரங்களுக்கு இடையில் மாற முடியாமல் சிரமத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது.

மேலும் ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப் சேவையை பெற முடியாமலலும், யூடியூப் டிவி உள்ளிட்ட சேவைகளை பெறமுடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் முடங்கியது தொடர்பாக ஏறத்தாழ 10ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வந்ததாக இணையதள சேவைகள் குறித்த தகவல்களை வழங்கும் Downdetector.com தெரிவித்துள்ளது.

அதேநேரம் தடங்கல்களுக்கு மன்னிப்பு கோரிய யூடியூப் நிறுவனம், பயனர்கள் அடைந்த சிக்கல்களுக்கு வருந்துவதாகவும், தொழில்நுட்ப பிரச்சினைகளை விரைவில் தீர்வு காண்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதிகளவிலான பயணர்கள் கணக்கின் உள் நுழைய முடியாமலும், நேவிகேஷன் பார் பகுதியை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதாக தெரிவித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments