வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் வங்கித் தரப்பில் கொடுத்த நெருக்கடியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர்

0 4429
வங்கித் தரப்பில் கொடுத்த நெருக்கடியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர்

தனியார் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் போனதால் அவர்கள் நெருக்கடி கொடுப்பதாகக் கூறி, விருத்தாசலத்தில் ஒருவர் தனது கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விருத்தாசலம் பழையமாட்டு சந்தை வளாகம் முன்பு ஒருவர், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்துடன் கிடந்துள்ளார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அரியலூர் மாவட்டம் கல்லாத்தூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது.

3 ஆண்டுகளுக்கு முன் கோவையிலுள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்தபோது, தனியாக தொழில் செய்வதற்காக ஐசிஐசியை வங்கியில் 15 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்ததால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

வங்கித் தரப்பில் இருந்து கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் கூறியதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments