அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ரொபோடிக் கருவி மூலம் அறுவை சிகிச்சை.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ரோபோடிக் கருவி அறுவை சிகிச்சை முறை மூலம் நோயாளி ஒருவருக்கு சிறுநீரக புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
35 கோடி மதிப்பில் கடந்த மாதம் நிறுவப்பட்ட ரோபோடிக் கருவி அறுவை சிகிச்சை அரங்கில் திருப்பத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் சிறுநீர் பாதையில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
சாதாரண முறையில் 6 மணி நேரம் வரை ஆகும் இந்த அறுவை சிகிச்சை, 2 அரை மணி நேரத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் துல்லியமாக செய்யப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வழக்கமாக செய்யும் அறுவை சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்ய 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகும் நிலையில், ரொபோடிக் அறுவை சிகிச்சையால் இந்த நோயாளி இரண்டு அல்லது 3 நாட்களில் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments