இந்தித் திணிப்பை தமிழக பாஜக எந்த விதத்திலும் ஏற்காது - அண்ணாமலை

0 9076
இந்தித் திணிப்பை தமிழக பாஜக எந்த விதத்திலும் ஏற்காது - அண்ணாமலை

இந்தித் திணிப்பை தமிழ்நாடு பாஜக எந்தவிதத்திலும் ஏற்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாய்மொழி தமிழால் மட்டுமே நமக்கு பெருமை என்றும், இந்தியால் எந்த பெருமையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் பொதுத்தேர்வுக்கு நடத்தும் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு ஒருதலைப் பட்சமாக மத்திய அரசை குறை சொல்ல கூடாது என்றும், இது முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தேர்வு எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments