ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப்காரில் சிக்கியவர்களை மீட்கும் பணி 45 மணி நேரத்திற்குப் பின் நிறைவு
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் ரோப்காரில் சிக்கியவர்களை மீட்கும் பணி 45 மணி நேரத்திற்குப் பின் நிறைவடைந்தது.
திரிகுட் மலை குன்றுகளுக்கு இடையே இயக்கப்பட்ட இரு ரோப்கார்கள் கடந்த ஞாயிறன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றொடொன்று மோதிக் கொண்டன.
இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சேவை தடைபட்டு சுற்றுலாப் பயணிகள் 1500 அடி உயரத்தில் அந்தரத்தில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய விமானப் படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் இணைந்து சவாலான மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி நடைபெற்ற போது ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். 47 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Comments