மதுரையில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட கல்லீரல்.. சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தம்

0 3629
மதுரையில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட கல்லீரல்.. சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தம்

மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரல், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

ஸ்டான்லி மருத்துவமனையில் 52 வயதான நபர் ஒருவர் கல்லீரல் செயலிழந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய, மதுரையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரலை தானமாக கொடுக்க உறவினர்கள் முன்வந்தனர்.

இதையடுத்து கடந்த 10ம் தேதி அவரது கல்லீரல் விமானம் மூலம் சென்னைக்கு விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரை மணி நேரத்தில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த நோயாளி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments