தமிழ்நாடு முதலமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்டோரின் புகைப்படத்தை மார்பிங் செய்து டுவிட்டரில் அவதூறு பரப்பியதாக பாஜக இளைஞரணி நிர்வாகி கைது

0 2838
தமிழ்நாடு முதலமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்டோரின் புகைப்படத்தை மார்பிங் செய்து டுவிட்டரில் அவதூறு பரப்பியதாக பாஜக இளைஞரணி நிர்வாகி கைது

தமிழ்நாடு முதலமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்டோரின் புகைப்படத்தை மார்பிங் செய்து டுவிட்டரில் அவதூறு பரப்பியதாக, கரூர் பாஜக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

பாஜக இளைஞரணி நிர்வாகியான முனியப்பனூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்களை மார்பிங் செய்து தவறாக பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த தீபக் சூரியன் என்பவர், இதுகுறித்து வாங்கல் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் பாஜக இளைஞரணி நிர்வாகி விக்னேஷை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments