கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதில் எந்தவித விதி மீறலும் இல்லை - அமெரிக்கா
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதில் எந்தவித விதி மீறலும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் இடையிலான காணொலி பேச்சுவார்த்தைக்கு பின், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜேன் பசாகி கூறுகையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், 1 முதல் 2 சதவீதம் அளவிலான கச்சா எண்ணெயை மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாக தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் இறக்குமதி செய்வது என்பது ரஷ்யா மீதான பொருளாதார தடையை மீறுவதாக இருக்காது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
ரஷ்யாவை விட அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வரும் நிலையில், கூடுதலாக உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் உறுதி அளித்ததாகவும் ஜேன் தெரிவித்துள்ளார்.
Comments