நல்ல நிலையில் இருந்த சாலையை புதிதாக போட்டதாக கூறி ரூ.3 கோடி மோசடி.. பொறியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்

0 3172
நல்ல நிலையில் இருந்த சாலையை புதிதாக போட்டதாக கூறி ரூ.3 கோடி மோசடி.. பொறியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்

ரூர் மாவட்டத்தில் நல்ல நிலையில் இருந்த சாலைகளை புதிதாக போட்டதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக புகாரில் பொறியாளர்கள் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

வால்காட்டு புதூர், செம்படாபாளையம், புகழூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் புதிதாக போடப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்சியரிடம் புகாரளித்திருந்தார்.

இதனை அறிந்த தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம், அவசரம், அவசரமாக அப்பகுதிகளில் சாலைகளை போடும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்த நிலையில், கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபால் சிங் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments