ஆட்டோமேட்டிக் டிராக் சேஞ்சர் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.. ஒரே தண்டவாளத்தில் 5க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம்
தண்டவாளத்தை பிரிக்கும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் 5க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டன.
திருவள்ளூர், பெரம்பூர் மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் தடம் பிரிந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெவ்வெறு நடைமேடைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை தண்டவாளங்களை பிரிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ராக் சேஞ்சேர் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்களை தடம் பிரிக்க முடியாமல் போனதால், பேசின் பிரிட்ஜ் சந்திப்பிலேயே 5க்கும் மேற்பட்ட ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
இதனால், சிரமத்திற்குள்ளான பயணிகள் பேசின் பிரிட்ஜ் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலைத்திற்கு ஆபத்தான முறையில் தண்டவாளங்களில் நடந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொழில்நுட்பக்கோளாறு தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments